முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆனந்த விகடன் பெருமைபடுத்திய தொல்லியல் ஆர்வலர்

புதுக்கோட்டை கவிஞர்  பீர்முகமது அவர்களை நான் இலக்கியவாத நல்லிணக்கம் கொண்டவர் என்பேன். ஓர்  இலக்கிய அமைப்பில்  அவர் பொறுப்பாளராக இருந்தாலும்  புதுக்கோட்டையில் நடைபெறும்  அனைத்து இலக்கிய அமைப்பு நிகழ்வுகளிலும்  இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் மற்றும் ஈர்ப்புப் புலத்தால் கலந்துகொள்கிறவர். இலக்கிய விழா அழைப்பிதழ்களில் தன் பெயரைத் தேடும் ஆளுமைகளுக்கு மத்தியில் விழா நடைபெறும் இடம், தேதி, நேரம் என்னவென்று தேடுகிறவர்.  மூன்று நான்கு இதழ்களோடு வெளிவந்து நின்றுபோய்விட்ட மணிப்புறா எனும் மாத இதழின் துணை ஆசிரியராக இருந்தவர்.



இவரது சமீப அடையாளம் தொல்குடிப் பொருட்களைச் சேகரித்து அதன் பெருமைகளைப் பட்டித்தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்க்கும் தொல்லியல் ஆர்வலர்.  இவர் பல நூறு பண்டைய பொருட்களைச் சேகரித்து அவ்வபோது காட்சிப்படுத்திவருகிறார். இவரது தொல்லியல் ஆர்வத்தை அங்கீகரிக்கும் பொருட்டு  3.4.2024 நாளிட்ட  ஆனந்த விகடன் இதழ் இவர் குறித்து எழுதியுள்ள பத்தி. 

" புதுக்கோட்டையைச் சேர்ந்த பீர் முகமது, ஒரு தொல்லியல் ஆர்வலர். பழைமையான மண்பாண்டங்கள், பித்தளை மற்றும் மரப்பொருள்களை ஆயிரக்கணக்கில் சேகரித்து, அவற்றை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தி வருகிறார். இதற்காக இவர், பழங்காலத்து அரிவாள்கள், அரிவாள்மணை, கத்தி வகைகள், ஆரம்பக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட டி.வி, ரேடியோ, செல்போன், கடிகாரங்கள், லாந்தர் விளக்கு, கேமராக்கள், இரும்புக் கருவிகள் என்று பல பொருள்களை சேகரித்திருக்கிறார். இவற்றைப் பார்க்க வரும் மாணவர்களிடம், 'நம் முன்னோர்கள் உடலுக்குத் தீங்கிழைக்காத மண்பாண்டம், உலோகப் பொருள்களையே பயன்படுத்திவந்தனர். நாம் அவற்றைப் புறக்கணித்து, பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததால் பலவித நோய்களை எதிர்கொள்கிறோம். அதனால், நமது முன்னோர்கள் வழியைப் பின்பற்றுவோம்' என்று அறிவுரை வழங்குகிறார். பழைமையின் பெருமை!



வாழ்த்துகள் நண்பரே,,,

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...