புதுக்கோட்டை தனிமாவட்டமாக ஜனவரி 14, 1974 அன்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆயினும் மாவட்டம் முறையாக உதித்த நாள் ஜனவரி 20, 1974. புதுக்கோட்டை உதய நாள் விழா எப்படியாக நடந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு தெரிவிக்கும் பொருட்டு தினமலர் பத்திரிகை வெளியிட்ட செய்தியை அப்படியே தருகிறேன். புதுக்கோட்டை மாவட்டம் இன்று உதயம் திருச்சி ஜனவரி 20 , 1974. தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் உதயமாகிறது. தமிழகத்திலேயே சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்த புதுக்கோட்டை பிரதேசம் மன்னர் ஆட்சியில் இருந்தது. இந்திய சமஸ்தானங்கள் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு காலம் சென்ற சர்தார் வல்லபாய் பட்டேல் முயற்சியால் ஒருங்கிணைந்தது. புதுக்கோட்டை சமஸ்தானமும் முதன் முதலில் ஒருங்கிணைந்த பெருமையைப் பெற்றது. பிறகு திருச்சி மாவட்டத்துடன் இணைத்து நிர்வாகம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மக்களின் நெடுநாளைய விருப்பம் இன்று நனவாகிறது. தனி மாவட்டமாக தமிழக அரசு முடிவு எடுத்து இன்று (ஜனவரி 20) புதுக்கோட்டையைத் தனி மாவட்ட ஆரம்பத்தை தமிழக முதல்வர் உயர்திரு கருணாநிதி துவக்கும் விழா காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. விழாவிற்கு மரா...
அண்டனூர் சுரா