புதுக்கோட்டை நகரம் நேரான வீதிகளை மட்டும் கொண்டதல்ல, சந்தைக்கும் பெயர்போன ஊர். சந்தையோடு தொடர்புடைய இரண்டு பேட்டைகள் புதுக்கோட்டையில் உண்டு. ஒன்று வண்டிப்பேட்டை, மற்றொன்று சந்தைப்பேட்டை. வண்டிப்பேட்டை மச்சுவாடியிலும் சந்தைப்பேட்டை நகரத்திற்கு மேற்கிலும் உள்ளன. சந்தைபேட்டையில்தான் மன்னராட்சி காலம் முதல் இன்று வரை மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டைக்கும் அருகிலுள்ள திருச்சிராப்பள்ளியில் இரண்டு மாட்டுச் சந்தைகள் நடந்திருக்கின்றன. ஒன்று கிழட்டு மாட்டுச் சந்தை, மற்றொன்று உழவு மாட்டுச் சந்தை. இவ்விரு சந்தைகளும் தீண்டாமையின் வடிவங்கள். சாதியின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தான் வளர்க்கும் மாடுகளை கிழட்டு மாட்டுச் சந்தையில்தான் விற்கவும் வாங்கவும் முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த இரண்டு மாட்டுச் சந்தைகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதப் பொருளாகி கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் இரண்டு பாகுபாட்டுச் சந்தைகள் ஒழிக்கப்பட்டு ஒரே சந்தையானது. இந்த விவாதம் கலைஞர் சட்டப் பேரவை உரையில் இடம்பெற்றுள்ளது. இப்படி திருச்சியில் இரு...
அண்டனூர் சுரா