முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டைக்குக் காந்தி வருகையும் பதிவுகளும்

 கட்டுரை புதுக்கோட்டைக்குக் காந்தி வருகையும் பதிவுகளும்                                     - அண்டனூர் சுரா புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் வருமானம் தரக்கூடிய தொழில்களாக மூன்று இருந்தன 1. உப்புக்காய்ச்சி விற்றல். 2. ராட்டினம் சுற்றி நூல் நூற்றல். 3. எரிசாராயம். இவைதவிர வைத்தூரில் கண்ணாடி வளையல், மண் வளையல் செய்யும் தொழிற்பட்டறையும் கரம்பக்குடியில் சாயப்பட்டறையும் இருந்தன. ஆயினும் சமஸ்தானத்திற்கு வருமானம் ஈட்டித் தந்தவை  முதலில் சொன்ன மூன்று தொழில்களும்தான்.   மண் உப்பு கடற்பகுதியைப் பெற்றிராத புதுக்கோட்டை தனியரசில் உப்புக் காய்ச்சும் தொழில் தொன்றுதொட்டு நடந்துவந்தது. விவசாயத்திற்கு உபயோகமற்ற காடுகளிலிருந்து மண் எடுத்து அந்த மண்ணைத் தண்ணீரில் நன்கு கரைத்து தெளிந்த நீரைச் சட்டியில் ஊற்றி காய்ச்சுவார்கள். பால் போன்ற வெண்மை நிறம் வந்ததும் இறக்கி ஒரு வாரம் வைத்திருப்பார்கள். பின்னர், அந்த உப்பு நீர் கெட்டியாகிவிடும். பிறகு அதை எடுத்து தூளாக...