ஊர்சுற்று இலக்கியம் SAVE NEDUVASAL , இது உலக க் கண்களை ஒற்றைப் புள்ளியில் குவித்த ச் சொற்றொடர். வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் புதுக்கோட்டை என்று சொன்னால் முன்பெல்லாம் காட்டிக்கொடுத்த ஊரா, எனக் கேட்பார்கள். நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு புதுக்கோட்டை என்றால் நெடுவாசல் புதுக்கோட்டையா, எனக் கேட்குமளவிற்கு அவ்வூர் பிரபலமும் பரபரப்பும் கொண்ட ஊரானது. இன்றைக்கும் அந்தப் பரபரப்பு இருக்கிறது. நாளைக்கும் இருக்கும். நெடுவாசல் குறித்துப் பேசுகையில் அணு உலை குறித்து ஓர் அணு விஞ்ஞானி சொன்ன ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. “ எப்பொழுதேனும் வெடிக்கலாம் எனும் படியான ஓர் அணுகுண்டு உண்மையில் எப்பொழுதும் வெடிக்கும் குண்டுதான்”. நெடுவாசலில் நடந்தேறிய நீண்ட நெடிய மக்கள் போராட்டத்திற்குப் பிறகு ஹெட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்படுகிறது, என அரசு அறிவித்துவிட்டது. ஆனாலும் அவ்வூரில் நிறுத்தப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் இன்னும் அகற்றப்படவில்லை. நெடுவாசலில் ஏன் ஆழ்த்துளைகள்? புதுக்கோட்டை மாவட்டத்தின் செழிப்பான பகுதி ஆலங்குடி. அதற்குள்தான் இருக்கிறது நெடுவாசல். ஒரு நிலம் செழிப்பா...
அண்டனூர் சுரா