முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...
சமீபத்திய இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் நிலவரைப்படம் - 1650 @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டையிலிருந்து இருபத்தெட்டு கல்  தூரத்திலிருக்கிறது ஆவூர் எனும்  சிற்றூர். ஆ என்றால் பசு என்று பொருள்.   பசுவின் பெயரால் அழைக்கப்படும் கிராமம் ஆவூர் . பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டில் இவ்வூர் பெரம்பூர் கட்டளூர் பாளையக்காரர்களின் ஆட்சியின் கீழ்  இருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை கிறித்தவத் திருச்சபையின் தலைவராக இருந்தவர் ராபர்ட்- டி- நோபிலி.  இவர் கிறிஸ்தவம் மதத்தை மதுரையிலிருந்து  திருச்சிராப்பள்ளி வரைக்குமாக விரிவுப்படுத்தி திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாகக்கொண்டு இமானுவேல் மார்ட்டின்ஸ் எனும் பாதிரியார் தலைமையில் ஒரு திருச்சபையை உருவாக்கினார். அப்பொழுது திருச்சிராப்பள்ளி நாயக்கர்களின் வசமிருந்தது. திருச்சியில் நாயக்கர்களுக்கும் இவர்களுக்கு முன்பு திருச்சியை ஆண்ட முகமதியர்களுக்குமிடையே அடிக்கடி மோதல்கள் எழுந்தன. இதனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையை அமைதியான இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார்கள் கத்தோலிக்க ஊழியர்கள். அதற்காக அவர்கள் அமைதியான ஓரிடத்தைத் தேடினார்கள். அப்படியாகத் தேர்வுசெய்யப்பட்ட இடமே ஆவூர். ஆவூர் அன்றைக்குப் பெரம்பூ...

மாடுகளை வரவேற்க ஒரு வாயில் @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை நகரம் நேரான வீதிகளை மட்டும் கொண்டதல்ல, சந்தைக்கும் பெயர்போன ஊர்.   சந்தையோடு தொடர்புடைய இரண்டு பேட்டைகள் புதுக்கோட்டையில் உண்டு. ஒன்று வண்டிப்பேட்டை, மற்றொன்று சந்தைப்பேட்டை. வண்டிப்பேட்டை மச்சுவாடியிலும் சந்தைப்பேட்டை நகரத்திற்கு மேற்கிலும் உள்ளன. சந்தைபேட்டையில்தான் மன்னராட்சி காலம் முதல் இன்று வரை   மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.   புதுக்கோட்டைக்கும் அருகிலுள்ள திருச்சிராப்பள்ளியில் இரண்டு மாட்டுச் சந்தைகள் நடந்திருக்கின்றன. ஒன்று கிழட்டு மாட்டுச் சந்தை, மற்றொன்று உழவு மாட்டுச் சந்தை. இவ்விரு சந்தைகளும் தீண்டாமையின் வடிவங்கள். சாதியின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தான் வளர்க்கும் மாடுகளை கிழட்டு மாட்டுச் சந்தையில்தான் விற்கவும் வாங்கவும் முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த இரண்டு மாட்டுச் சந்தைகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதப் பொருளாகி கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்   இரண்டு பாகுபாட்டுச் சந்தைகள் ஒழிக்கப்பட்டு ஒரே சந்தையானது. இந்த விவாதம் கலைஞர் சட்டப் பேரவை உரையில் இடம்பெற்றுள்ளது. இப்படி திருச்சியில் இரு...

பன்றி நாடா புதுக்கோட்டை @ அண்டனூர் சுரா

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் " என்கிறது தொல்காப்பியம்  சொல்லதிகாரம். தமிழகத்தின் எந்த நிலத்தின் வரலாறும் இந்த வரியிலிருந்தே தொடங்க முடியும் . செந்தமிழ் நிலம் பன்னிரெண்டு கொடுந்தமிழ் நாடுகளாக இருந்தது என்பது இவ்வரி சொல்லும் பொருள் . இங்கு செந்தமிழ் என்பதும் கொடுந்தமிழ் என்பதும் ஒன்றுபோலிருந்தாலும் இரு சொற்களும் ஒன்றல்ல . செந்தமிழ் சொல்லைத் தொல்காப்பியம் , நன்னூல் இரு இலக்கண நூற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தியுள்ளன .   1.    " செந்தமிழ் சேர்ந்த பன்னிரு            நிலத்தும்  தங்குறிப் பினவே      திசைச்சொல்  கிளவி ” ( தொல், சொல்லதிகாரம் ) 2. " செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு    நிலத்தினும்      ஒன்பதிற் றிரண்டினில் தமிழ்மொழி நிலத்தினும்                 தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப ”                               ( நன...