முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கிள் ஓட்டும் இயக்கம்

1990-92  ஆம் ஆண்டு கால இடைவெளியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்  மரியாதைக்குரிய ஷீலாராணி சுங்கத் அவர்கள்.  இவரால் தொடங்கப்பட்ட சைக்கிள் ஓட்டும் இயக்கம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் மக்கள் இயக்கமாக மாறியது.  இந்த இயக்கம் வீட்டுக்குள் நீண்டகாலமாக அடைப்பட்டிருந்த பெண்களைச் சைக்கிள் ஓட்ட வைத்ததுடன் சமூகப் புரட்சிக்கும் பெண் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது. இந்த இயக்கத்தின் வெற்றிதான் இன்றைய தமிழ்நாடு அரசின் உயரிய திட்டமான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் விலையில்லா சைக்கிள் திட்டம் என்றும்கூட சொல்லலாம். இவருடனான நேர்காணல் குங்குமம் தோழி ஜூலை 1-15,2024 இதழில் வெளிவந்திருக்கிறது. அந்த நேர்காணல் இதோ: " 1991 இல் இந்தியாவில் கல்வி அறிவின்மை  விகிதம் மிகவும் குறைவு. அதிலும் நான் மாவட்ட ஆட்சியராக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. குறிப்பாக இங்கு பெண்களுக்குக் கல்வி என்பது கேள்விக்குறியாக இருந்தது. இங்குள்ள கிராமத்துப் பெண்கள் படிப்பைவிட தங்களின் அன்றாட வீட்டு வேலைகளுக்குதான் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தார்க...

புதுக்கோட்டைக்கு காவிரிநீர் முயற்சிகள்; மன்னராட்சியிலிருந்து இன்று வரை.

‘ கா டாரம்பம் ’ – புதுக்கோட்டைக்கு இப்படியாக ஒரு பெயருண்டு. அதாவது நீர்ப்பாசனமற்ற ஊர். புதுக்கோட்டையின் நீராதாரம் என்பது மழைதான். ஆகவே மானாவாரிப் பூமி என்றும் சொல்வர். புதுக்கோட்டை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 4,50,476.195 ஹெக்டர். இதில் நஞ்சை நிலம் 96,705.195 ஹெக்டர். புஞ்சை நிலம் 1,93,286.700 ஹெக்டர். மீதமுள்ளது அரசின் வனப்பகுதி. இந்தப் புதுக்கோட்டையை பொன் விளையும் பூமியாக்க மன்னர் காலம் தொட்டு இன்று வரை காவிரி நீரைப் புதுக்கோட்டைக்குக் கொண்டுவரும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ திட்டங்கள், எத்தனையோ முயற்சிகள், எத்தனை வகைவகையான போராட்டங்கள். இருந்தென்ன காவிரி வருவேனா என்கிறது. அழைத்ததும் வந்துவிட காவிரி என்ன அத்தனை குறுகிய ஆறா? உலக ஆறுகளில் தமிழகத்தில் ஓடும் காவிரிக்குத் தனிச்சிறப்பு உண்டு. பெரும்பாலான ஆறுகளின் தண்ணீர் பொதுமக்களுக்கு சிறிதளவே பயன்பட்டு பெரும்பகுதி கடலில் கலந்துவிடுகிறது.   காவிரி நீர் அப்படியல்ல. இவ்வாற்றின் 95 சதவிகிதம் நீர் மக்களுக்கு குடிநீராக, பாசனமாகப் பயனளிக்கிறது. உலகில் வேறெந்த ஆறும் இந்த அளவுக்கு மக்களுக்குப் பயன்படவில்லை. இதுவே காவிரியின் ...