புதுக்கோட்டையிலிருந்து இருபத்தெட்டு கல் தூரத்திலிருக்கிறது ஆவூர் எனும் சிற்றூர். ஆ என்றால் பசு என்று பொருள். பசுவின் பெயரால் அழைக்கப்படும் கிராமம் ஆவூர் . பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டில் இவ்வூர் பெரம்பூர் கட்டளூர் பாளையக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை கிறித்தவத் திருச்சபையின் தலைவராக இருந்தவர் ராபர்ட்- டி- நோபிலி. இவர் கிறிஸ்தவம் மதத்தை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளி வரைக்குமாக விரிவுப்படுத்தி திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாகக்கொண்டு இமானுவேல் மார்ட்டின்ஸ் எனும் பாதிரியார் தலைமையில் ஒரு திருச்சபையை உருவாக்கினார். அப்பொழுது திருச்சிராப்பள்ளி நாயக்கர்களின் வசமிருந்தது. திருச்சியில் நாயக்கர்களுக்கும் இவர்களுக்கு முன்பு திருச்சியை ஆண்ட முகமதியர்களுக்குமிடையே அடிக்கடி மோதல்கள் எழுந்தன. இதனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையை அமைதியான இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார்கள் கத்தோலிக்க ஊழியர்கள். அதற்காக அவர்கள் அமைதியான ஓரிடத்தைத் தேடினார்கள். அப்படியாகத் தேர்வுசெய்யப்பட்ட இடமே ஆவூர். ஆவூர் அன்றைக்குப் பெரம்பூ...
அண்டனூர் சுரா