புதுக்கோட்டை திருமயம் சாலையில் டிவிஎஸ் என்றொரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது. புதுக்கோட்டை பொதுமக்களுக்கான பேருந்து சேவையுடன் நெருங்கிய தொடர்புகொண்ட நிறுத்தம் இது. புதுக்கோட்டையின் முதல் பேருந்து நிறுத்தம் என்றும்கூட இதைச் சொல்லலாம். பேருந்து இன்று பெண்களுக்கான இலவச ஊர்த்தியாக இ யங்கிக்கொண்டி ருக்கிறது. ஒரு காலத்தில் பேருந்தில் பயணம் செய்வதற்கு விசா தேவையாக இருந்தது. மேலும் பேருந்து பயணிகளுக்குச் சிற்றுண்டி வழங்கும் முறை இருந்தது. இதெல்லாம் நடந்தது வெளிநாட்டிலல்ல, நமது புதுக்கோட்டையில். பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேருந்து சேவை டி.வி.எஸ் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இரு சக்கர வாகனமான டி.வி.எஸ்தான். இரு சக்கரம் வாகனத்தின் பரிணாம வளர்ச்சிதான் பேருந்து. ஆனால் டி.வி.எஸ் நிறுவனம் இரு சக்கர வாகனம் எனும் மோட்டார் பைக் தயாரிப்பு சேவையைத் தொடங்குவதற்கு முன்பு பேருந்து சேவையைத் தொடங்கியதும் சாதி, மதம் பாகுபாடற்று மக்கள் அதில் பயணம் செய்யும் வகையில் பேருந்தை இயக்கியதும் பலரும் மறந்த செய்திகளில் ஒன்றாகும். திருக்குறுங்குடி வெங்கரம் சுந்தரம் என அழைக்கப்பட்ட டி.வி.சு...
அண்டனூர் சுரா