முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டை கிராம ஊர்களும் காரணப் பெயர்களும்

ஒரு முறை தேர்தல் பணிக்காக லெம்பலக்குடி, எனும் ஊருக்குச் செல்ல நேரிட்டது. திருமயம் ஒன்றியத்தில் அவ்வூர் இருக்கிறது. அந்த ஊரின் பெயரைப் பார்த்ததும் தமிழ் இலக்கணத்தை என்னால் மறுதலிக்க முடியவில்லை. லெம்பலக்குடியா, இலெம்பலக்குடியா என்று. தமிழ் இலக்கணப்படி, ல – எழுத்துக்கும் முன் ‘இ’ இடம்பெற வேண்டும். லக்குமணன் – இலக்குமணன், லட்சியம் – இலட்சியம் இப்படியாக.   இலெம்பலக்குடி என்றுதான் இருக்க வேண்டுமோ?, நம் தமிழ்ப்பற்றாளர்களுக்கு இந்தப் பிழை எப்படிக் கண்ணுக்குத் தெரியாமல் போனது?. ஊரின் பெயர்க்காரணத்தை விசாரிக்கத் தொடங்கினேன். ஒரு பெரியவர் சொன்னார். "ஏழு அம்பலக்குடி   என்பது இவ்வூரின் பெயர்.   மெல்ல மருவி லெம்பலக்குடி என்றாகிவிட்டது”. தமிழில் ழ வரிசை எழுத்துகள் தமிழர்களிடம் வழக்கொழிந்து வந்திருக்கிறது, என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில், அழும்பில் என்றொரு ஊர் உண்டு. அகநானூற்றில் இடம் பெற்றுள்ள ஊர். இவ்வூரை மதுரைக்காஞ்சியும் பாடியுள்ளது. ‘மானவிறல் வேள்’ என்கிற குறுநில மன்னன் ஆண்ட பகுதி. அவ்வூரிலுள்ள ழ வரிசை எழுத்தான ‘ழு’ மக்கள் நாவில் நுழையாமல்,   அம்ப...