மதுரை கோட்ட ரயில்வேயில் முக்கிய ரயில் நிலையமாக புதுக்கோட்டை இணைப்பு திகழ்கிறது. திருச்சி காரைக்குடி வழித்தடத்தில் அமைந்துள்ள பழமையான இந்த ரயில் நிலையம்1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. திருச்சி - காரைக்குடி ஊர்களுக்கிடையில் ரயில் இயக்கப்பட்டு அதன்பிறகு 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மானாமதுரை வரைக்குமாக இருப்புப் பாதை நீட்டிக்கப்பட்டது. தற்போது வட இந்தியாவிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் முக்கிய ரயில் தடமாக விளங்குகிறது. இந்த மார்க்கத்தின் முக்கிய ரயில் நிலையம் புதுக்கோட்டை. புதுக்கோட்டையில் ரயில் நிலையம் அமைந்ததற்கும் பின்னே ஒரு போராட்ட வரலாறு உண்டு. முதலில் ரயில் அமையவிருந்த இடம் கீரனூருக்கும் அருகிலுள்ள ஆலவயல். இந்த ஊர் கவிநாடு கண்மாயினால் விவசாயம் செழிப்பாக நடைபெறும் நஞ்சை நிலங்கள் கொண்ட பகுதியாகும். இந்த இடத்தில் ரயில்வே நிலையம் அமைக்க அன்றைய பிரிட்டிஷ் ரயில்வே துறை முடிவுசெய்தது. கவிநாடு கண்மாய் விவசாயிகள் இங்கே ரயில் நிலையம் அமைக்கக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிறகு வெள்ளனூரில் அமைக்க இடம் தேர்வுசெய்யப...
அண்டனூர் சுரா