முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்ததா இணைக்கப்பட்டதா?

தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் உதயமாகிறது. தமிழகத்திலேயே சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்த புதுக்கோட்டை பிரதேசம் மன்னர் ஆட்சியில் இருந்தது. இந்திய சமஸ்தானங்கள் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு காலம் சென்ற சர்தார் வல்லபாய் பட்டேல் முயற்சியால் ஒருங்கிணைந்தது. புதுக்கோட்டை சமஸ்தானமும் முதன்முதலில் ஒருங்கிணைந்த பெருமையைப் பெற்றது. பிறகு திருச்சி மாவட்டத்துடன் இணைத்து நிர்வாகம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மக்களின் நெடுநாளைய விருப்பம் இன்று நனவாகிறது. தனி மாவட்ட ஆரம்பத்தை தமிழக முதல்வர் உயர்திரு கருணாநிதி துவக்கும் விழா காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. விழாவிற்கு மராமத்து இலாக அமைச்சர் சாதிக் பாஷா தலைமை வகிக்கிறார். அனைவரையும் மாவட்ட கலெக்டர் ராமதாஸ் வரவேற்பார். கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் விழா மலரை வெளியிடுகிறார். திருச்சி மாவட்ட பகுதியை அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் தஞ்சை பகுதியை மண்ணை நாராயணசாமியும் ஒப்படைப்பு செய்கின்றனர். புதுக்கோட்டை தனி மாவட்டமாவதையொட்டி சகல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அலங்கார வண்டிகள் ஊர்வலம் பிரம்மாண்ட அளவில் மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. பொதுநலக க...