புதுக்கோட்டைச் செய்தி பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்
புதுக்கோட்டைச் செய்தி
இந்திய சுதந்திர நாளைக் கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய்தி (PUDUKKOTTAI INFORMATION)’ என்கிற பெயரில் இரு மொழி மாத இதழைத் தொடங்கியிருக்கிறது. மேலும் இவ்விதழ் சுதந்திர தேதியைக் கவுரவிக்கும்பொருட்டு ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் தேதி வெளிவரும்படியாக கொணர்ந்திருக்கிறது. உலக நாடுகளின் சுதந்திர தினம் வரலாற்றல் சுதந்திர நாளன்று ஒரு பத்திரிகை தொடங்கப்பட்டது புதுக்கோட்டையில்தான்.
மலர்.1, இதழ் 1. ஆகஸ்ட் 15, 1947, ஸர்வஜித்து ஆடி மாதம் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்கிற முகப்புக் குறிப்புடன் மலையுடன்கூடிய அருள்மிகு பிரகதம்பாள் கோவில் அட்டையுடன் இந்த மாத இதழ் வெளிவந்திருக்கிறது. இதழின் முதல் பக்கத்தில் சுதந்திர தினம் என்கிற தலைப்பில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அந்தத் தலையங்கம் பின்வருமாறு:
சுதந்திர தினம்
“இன்றைய தினம் பொதுமக்கள் குதூகலமாகவிருக்கும் தினம். இந்தியர்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த ஸ்வந்திரம் இன்று கைக்கெட்டிவிட்டது. குவெட்டாவிலிருந்து கன்யாகுமரிவரைக்கும், கராச்சியிலிருந்து கல்கத்தா வரைக்கும் இந்நாடு முழுவதும் இக்கொண்டாட்டத்திலீடுபட்டிருக்கிறது. பிரிட்டன் இந்த தேசத்தின் ஆட்சியை அதன் மக்களிடம் கொடுத்துவிட்டது. நிசி நேரத்திற்குப்பின் விடியற்காலைத்திற்கு வெகுநேரம் முன்னதாகவே இந்தியத் தலைவர்கள் தேச காரியங்களை நடத்தத் துவக்கினார்கள். இந்தியாவின் பாத்யம் சித்தித்துவிட்டது. ஒவ்வொரு இந்தியர் மனதிலும் தன் பிதுரார்ஜித சொத்தையடைந்த மாத்திரத்தில் அறியதோர் உணர்ச்சி எழும்பாதிராது.
நாடெங்கும் நடைபெறும் இக்கொண்டாட்டத்தில் நமது சமஸ்தான மக்களும் கலந்துகொள்ள உரிமையுண்டு. மாட்சிமைதங்கிய மன்னர்பிரான் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை மிகுந்த குதூகலத்துடன் கொண்டாடப்பட வேண்டுமென உத்திரவிட்டார்கள். இன்று சூரியோதயத்தில் சமஸ்தானக் கொடியும், இந்திய யூனியன் கொடியும் சேர்த்து உயர்த்தப்படும். காலை 7.30 மணிக்கு சமஸ்தான போலீஸ்படை, சமஸ்தான பியாண்டு கோஷ்டியுடன் கவாத்து முறையில் மன்னர்பிரான் முன்னிலையில் செல்லும். பப்ளிக் ஆபீஸிலிருந்து ஓர் மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு பழைய அரண்மனைச் சதுக்கத்திற்குச் செல்லும். அங்கே அதைத் தொடர்ந்து ஓர் பொதுக்கூட்டம் நடைபெறும். குறிப்பிட்ட சொற்பொழிவாளர்கள் பேசுவார்கள். இந்த அரிய சந்தர்ப்பத்திற்கேற்ற சொற்பொழிவுகள் நடைபெறுமென்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தச் சந்தர்ப்பமானது கல்லையும் கனிவிக்கும் சொற்களைச் சொல்லும்படியும் ஊமையர்களைப் பேசும்படியும் செய்யக்கூடிய தன்மையுள்ளதல்லவா?
இன்று ஓர் நன்னாள். இன்று முதல் இந்தியர்கள் தலைநிமிர்ந்து முன்னிலும் அதிக சுவாதீனத்துடன் நடப்பார்கள். இன்று விழாவில் கேவலம் கொண்டாட்ட மட்டுமல்ல, அதில் ஒரு கம்பீர உணர்ச்சியுமுண்டு. நமது மேன்மைதங்கிய மன்னர்பிரான் தன்து பிரகடத்தில் “நமது புதிய அந்தஸ்துடன் புதிய பொறுப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன” என்று நினைவுறுத்தியபடி நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற புதிய நிலைக்குத் தக்கவாறு கௌரவத்துடனும் தைர்யத்துடனும் சமரசத்துடனும் நடக்கவேண்டிய கடமை ஏற்பட்டு இருக்கிறது.
நமது குதூகலத்தினிடையே சொற்ப வருத்தமான எண்ணம் குறுக்கிடும். அதாவது இந்தியா சுதந்திரமடையும் நேரத்திலேயே இரண்டாகப் பிளவுப்பட்டதென்பதே. ஆயினும் நமது தலைவர்கள் இப்பிரிவினைக்கு இசைந்துள்ளார்கள். அவர்கள் நன்மையென்று நினைப்பது நம்மெல்லோருக்கும் நன்மைதான். இந்தப் பிரிவினையிலிருந்தே முன்னிலும் பலமான ஒற்றுமை இன்னமும் ஏற்படலாம். எவ்விதமிருப்பினும் பாகிஸ்தானும் ஹிந்துஸ்தானமும் யமுனையும் கங்கையும் போல் ஒன்றாக கலந்து தங்கள் நீரால் தேசத்தைச் செழிப்புறச் செய்யுமென்பது நமது ஆவல்.
இந்தப் புனித நன்னாளில் நமது தேசீயத் தலைவர்களையும் அவர்களுக்கு ஒத்தாசையாகயிருந்து, இந்நாளை சிறப்புறக் கொண்டாடக் காரணமாகயிருந்தவர்களையும் நன்றியுடன் நினைக்க வேண்டியது நமது கடமையாகும். எல்லாவற்றையும்விட நாம் எல்லாம் வல்ல இறைவனை முழு மனதுடன் நமது நன்றியைக் காட்டி பிரார்த்திக்க வேண்டும். புதிய மந்தமாருதமான சுதந்திரக் காற்றில் துர்நாற்றங்கள் கலவாமலிருக்குமாறும் உண்மையில் இந்தியா இனிது வாழ்வதற்குள்ள ஷ்வர்க்கமாகயிருக்கும்படி செய்யவேண்டுமாயும் நாம் கடவுளைப் பிரார்த்திக்காமலிருந்தால் நமது கொண்டாட்டம் பூர்ணமாகாது. இனிய வாழ்வென்பது நமது பக்கத்திலுள்ளவர்களைப் பற்றி அதிகமாகவும் நம்மைப் பற்றிக் கொஞ்சம் குறைச்சலாகவும் எந்நேரமும் தாய்நாட்டைப்பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பதுவே. அவ்விதமிருந்தால்தான் நமக்கு ஒன்றுபட்ட வாழ்வும் முன்னிலும் அதிகமாக ஒரு தேசத்தாரை உயர்வுபடுத்தும் தார்மிகத்துவமும் நம்மிடம் செழிக்கும். ஜெய் ஹிந்து!”
இதழ் தொடக்கக் காரணம்
“புதுக்கோட்டை செய்தி என்பது அரசியல் இலாகாக்களில் நடைபெறம் விசயங்களைப் பற்றிய சரியான தகவல்களைப் பொது மக்களுக்குக் கொடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஓர் பிரசுரம். இந்திய சுதந்திரம் வழங்கப்பெறும் புனித தினத்திலேயே இந்த ‘புதுக்கோட்டைச் செய்தி’ எனும் முதல் மலர் வெளிவரவேண்டுமென்பது தர்பார் அவர்களின் நோக்கம். இப்பிரசுரத்தை ஆரம்பிப்பதற்கு இதைவிட ஓர் மங்களகரமான தினம் கிடைப்பதரிது. இப்பிரசுரத்தின் எதிர்கால வாழ்க்கையும் இதன் ஆரம்பத்தை அனுசரித்தே இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.” என்று இந்த இதழ் தொடக்கத்தின் நோக்கத்தை எழுதியுள்ளது.
சுதந்திர தினம் முன்கூட்டியே அறிவிப்பு
இந்தியாவிற்கு சுதந்திரம் ஆகஸ்ட்15 அன்று கிடைக்கப்போகிறது என்கிற செய்தியை முன்கூட்டியே புதுக்கோட்டை மக்களுக்கு ஒரு பிரகடனமாக அறிவித்துள்ள செய்தியை இந்த இதழ் கொண்டுள்ளது. அதாவது அந்தாண்டின் ஜுலை 15, புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் இருபத்து ஐந்தாவது பிறந்த நாள். அந்த விழா பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் அவர் விடுத்த பிரகடனத்தில், “இந்தியாவின் சுதந்திரக் கோரிக்கை அங்கீகாரம் செய்யப்பட்டுவிட்டது. இன்று முதல் சரியாக ஒரு மாதத்தில் அந்த சுதந்திரம் விரைவாக அமுலுக்கு வந்துவிடும். நமது நாட்டின் சரித்திரத்திலே இது பெருமைவாய்ந்த தருணமாகும். இத்தருணத்தில் இவ்விதமான சித்தியைப் பெற காரணமாகயிருந்த இந்திய தேசீயத் தலைவர்கள் எல்லோரையும் நன்றியுடன் ஞாபகப்படுத்திக்கொள்வது உசிதமான காரியமாகும்” என்கிற செய்தியை இந்த இதழ் பிரசுரத்திலுள்ளது. மேலும் இந்த இதழில் சுதந்திர தின வாழ்த்து பாக்கள், கொடிப்பாட்டு ஆகியவை இடம்பெற்றிருப்பதைக் கொண்டு பார்க்கையில் சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுவதற்கென்றும் அதன் மான்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கிலும் இந்த இதழ் தொடங்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. இந்த இதழின் ஆசிரியர் யாரென்று இதழில் இடம்பெற்றிருக்கவில்லை. சந்தா விபரம் வருஷம் 1 க்கு ரூபாய் 3. தனிப்பிரதி அணா 4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிய புகைப்படங்கள்
1947 செப்டம்பர் 15 நாளிட்ட இரண்டாவது இதழில் புதுக்கோட்டையில் சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட செய்தியும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. புதுக்கோட்டை பழைய அரண்மனை சதுக்கத்தில் இந்திய கொடியுடன் சமஸ்தானக் கொடி ஏற்றப்பட்ட செய்தி இடம் பெற்றுள்ளது. மற்றொரு படத்தில் புதுக்கோட்டை கீழராஜவீதியிலிருந்த விக்டோரியா வாயில் வழியே நடைபெற்ற சுதந்திர அணிவகுப்பு புகைப்படம் பெரும் மக்கட்திரளுடன் கூடிய படமாக இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை சிட்டி ஆர்ட் ஸ்டுடியோ மற்றும் வி.சீனிவாசன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள்.
சுதந்திர நாளன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. புதுக்கோட்டை நகர கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. பழைய அரண்மனைக்கும் அருகிலுள்ள மன்னர் சதுக்கத்தில் அன்றைய சூரிய உதயத்தை வணங்கும் பொருட்டு சரியாக 7.30 மணிக்கு இந்திய சுதந்திர கொடியையும் சமஸ்தான கொடியையும் மன்னர் ராஜகோபால தொண்டைமான் ஏற்றியுள்ளார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முதல் மந்திரியாக இருந்த வி. ஷண்முகம் செட்டியார் அவர்கள் மகாத்மா காந்தி மற்றும் பண்டித நேருவின் உருவப்படங்களைத் திறந்துவைத்துள்ளார். இவர்கள் இருவரும் பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் புதுக்கோட்டைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தி யானை ஊர்வலம்
1927, செப்டம்பர் 21 அன்று காந்தியடிகள் அவர்கள் புதுக்கோட்டைக்கு வருகைதந்தார். அன்றைய இரவு புதுக்கோட்டையில் தங்கினார். அவர் தங்கியிருந்த இடத்திற்கும் அருகில் தற்போது பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் பிறகு காந்தி சதுக்கம் என்று அழைக்கப்பட்டது. அந்த காந்தி சதுக்கத்தில் சுதந்திர நாளன்று சமஸ்தான காங்கிரஸ் தலைவர் வி. கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவர்கள் இந்திய கொடியை ஏற்றியிருக்கிறார். சுதந்திர நாளன்று தாகூர் இயற்றிய ‘ஜன கண மன’ தேசிய கீதம் மாணவர்களைக் கொண்டு பாடப்பட்ட செய்தியும் இதழில் இடம்பிடித்துள்ளது.
புதுக்கோட்டையில் இயங்கிய இருபத்து எட்டு சங்கங்கள் இணைந்து திலகர் திடலில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தியிருக்கிறார்கள். மாலையில் நடைபெற்ற ஓர் அணிவகுப்பில் யானை ஊர்வலம் நடந்திருக்கிறது. யானையில் காந்தியின் உருவப்படத்தை ஏற்றி ஊர்வலமாக வந்திருக்கிறார்கள். பழைய அரண்மனைக்கு நேர் பின்புறமுள்ள இன்றைய புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மிகப் பழைய காந்தி உருவப்படம் இருக்கிறது. இந்தப் படம் சுதந்திர நாளன்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட படமாக இருக்கலாம். மேலும் நாகராஜன் என்பவர் தீரர் சத்தியமூர்த்தியின் உருவப்படத்தைத் திறந்து வைத்திருக்கிறார். அதேநாளில் மற்றொரு யானை ஊர்வலம் பப்ளிக் ஆபிஸ் கட்டடத்திலிருந்து இந்திய தேசியக் கொடியை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பழைய அரண்மனை சதுக்கம் வந்தடைந்திருக்கிறது.
அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து அன்றைய திவானாக இருந்த கான் பகதூர் பி. கலிபுல்லா சாகிப் அவர்களின் தலைமையில் பழைய அரண்மனை சதுக்கத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்திருக்கிறது. அதில் மன்னர் பொதுமக்களுக்குச் சொல்லும் சுதந்திரச் செய்தியை வாசித்துள்ளார். அதில்,“புது இந்தியாவில் சமரசம், சமத்துவம், கூட்டுறவு,அகிம்சை நிலவ வேண்டும். இதுவே நம் நோக்கமாகும்” என்கிற வரிகள் இடம்பெற்றள்ளது.
இந்த நாளைக் கொண்டாடும் பொருட்டு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் நான்காவது பாரம் (வகுப்பு) வரை இலவச கல்வி அறிவிக்கப்பட்டது. மத்திய சிறையிலிருந்து 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
சுதந்திர விநாயகர்
இன்றைய புதுக்கோட்டை கணேச நகர் நான்காம் வீதியில் சுதந்திர விநாயகர் என்கிற பெயரில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் சுதந்திர தினத்துடன் தொடர்புகொண்டது. இப்பகுதியில் காந்தியவாதியான சி. லெட்சுமண சர்மா அவர்கள் இயற்கை இல்லம் அமைப்பின் தலைவராக இருந்தார். இவர் சுதந்திர தினத்தை சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடினார். வானளாவிய கொடிமரம் நிறுவி கொடிமரத்தின் பீடத்தை ஒரு சிறிய கோவிலாக அமைத்தார். பிறகு அந்த கோவிலில் ஒரு விநாயகரை நிறுவி அதற்கு சுதந்திர விநாயகர் என்று பெயர்சூட்டினார். இந்த விநாயகர் இன்று அதேபெயரில் பெயர்விளங்கி வருகிறது.
இப்படியான அரிய தகவல்களைக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை செய்தி இருமொழி மாத இதழ் பத்து மாதங்களோடு நின்றுவிட்டது. சுதந்திர நாளன்று தொடங்கப்பட்ட உலகின் ஒரே பத்திரிகை என்கிற சிறப்பைப் பெறுகிறது, ‘ புதுக்கோட்டைச் செய்தி’ எனும் இம்மாத இதழ்.
குறிப்பு - புதுக்கோட்டைச் செய்தி எனும் இப்பத்திரிக்கை இதுநாள் வரை வரலாற்றில் எழுதப்படாமலிருந்தது. இந்த மாதம் உங்கள் நூலகம் இதழில் பிரசுரம் கண்டுள்ளது.
@அண்டனூர் சுரா
1947 ஆகஸ்ட் 15, இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது.

%20(1).jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக