க ற்றது கையளவு என்றார் ஔவை மூதாட்டி. சிறையளவு என்கிறார் கவிஞர் ஆர்.நீலா. கற்றது சிறையளவு, சிறையில் கைதிகளாக வ ாழ்ந்த பள்ளி வயதுக் குழந்தைகளின் கற்றல் நிலையை ஆய்வு செய்து வெளிக்கொணர்ந்த நூல். ஆர்.நீலாவின் சிறப்பே இதுதான். இவரது எழுத்தில் உயிர் இருக்கும், மெய் இருக்கும், களமும் இருக்கும். கற்றது சிறையளவு நூலின் களம் சிறைச்சாலை. இந்நூலின் வெளியீடு அவரது ஊரான ஆலங்குடியில் நடைபெற்றது. ஆண்டு 2012. நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு அழைப்பாளர் புதுக்கோட்டையின் மேனாள் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷீலாராணி சுங்கத் அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறிவுக்கண் திறந்தவர் இவர். அறிவொளி தீபத்தை இயக்கமாக பட்டித்தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தவர். அவர் இன்னும் எத்தனை உயர்வான பதவிக்குப் போனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மேனாள் கலெக்டர் என்பது அவரது உயர்பேறு. இம்மாவட்டத்தில் எத்தனை ஆட்சியர் பணியேற்று ஆட்சிப்புரிந்தாலும் ஷீலாராணி சுங்கத் பிடித்த இடத்தை இனி அவரால் கூட நிரப்ப முடியாது. மக்களோடு மக்களாக நின்றவர். இந்த இடத்தில் புதுக்கோட்டை அறிவொளி இயக்கம் பற்றி கொஞ்சம் நினைவுகூர வேண்டும். 1988 ஆம் ஆ...
அண்டனூர் சுரா